Friday, 17 October 2014

லஷ்மி குபேர பூஜை 


திருமகளின் திருவருளைப் பற்றி நினைத்தவுடனே அவள்  எப்போதும் நம்மை விட்டு பிரியாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணந்தான் முதலில் வருகிறது. ஆம் அவளும் அள்ளித் தரத்தான் ஆசைப்படுகிறாள்

கொடுக்க அந்த அலைமகளுக்குக் கருணை மிகுந்திருந்தாலும் பெற்றுக்கொள்ள நமக்கு தகுதி யிருக்க வேண்டாமா? அந்த தகுதியை வளர்த்து கொண்டு அவள் அருள் பெறுவோம்

செல்வம் அனைத்துக்கும் முதலாளியம்மா - மஹாலஷ்மி
அவளுடைய கணக்குபிள்ளை மேனஜர்         - குபேரன்

ஐப்பசி மாதம் முழுவதும் லஷ்மி குபேர பூஜை செய்ய உகந்தது. அதிலும் குறிப்பாக தீபாவளி அமாவாசை முடிந்து பிரதமை ஆரம்பிக்கும் நேரம் மிக மிக சக்தி வாய்ந்த நேரமாக கருதப் படுகிறது

வீட்டினை சுத்தமாக பெருக்கி முடிந்தால் கோமியத்துடன் கொஞ்சம் மஞ்சள் கலந்து தெளிக்கவும் பின்னர் சுத்தமாக தண்ணீர் கொண்டு துடைக்கவும்


பூஜை செய்யும் முறை -

விநாயகரை வணங்கி பூஜை சிறப்பாக நடக்க வேண்டுவோம் -
மஞ்சளில் பன்னீர் கலந்து மஞ்ச பிள்ளையாரை பிடித்து வைத்து ஆரம்பிக்கவும்

பூஜையறையிலோ அல்லது வேறு எங்கோ கிழக்கு பார்த்து குபேர பூஜை செய்ய வேண்டும்

சுவாமிகள் அனைத்தும் கிழக்கு நோக்கியிருக்க வேண்டும்.
நீங்கள் வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ளவும்

குபேரன் படம், லஷ்மி படம் எடுத்து அருகே வைக்கவும்

தாம்பாளம் அல்லது மனைக்கட்டையில் அல்லது சுத்தமான தரையில் குபேரன் படத்திற்கு முன் கீழ்கண்ட படத்தை அரிசி மாவினை கொண்டு வரைந்து கொள்ளவும். அரிசி மாவுடன் தண்ணீர் கலக்காமல் சுத்தமான பன்னீர் கலந்து அரிசி மாவினை செய்யவும்


அடுத்து வரைந்துமுடித்தவுடன் ஓவ்வொரு கட்டத்திலும் உள்ள எண்களுக்கு ஏற்ப 1 ரூ, அல்லது 2 ரூபாய் அல்லது 5 ரூபாய் நாணயங்களை வைக்கவும்.
(எண் 27 எனி 27 = 1 ரூநாணயங்களை கட்டத்தில் வைக்கவும்)

அடுத்து அன்னை மஹாலஷ்மியினை கும்பத்தில் ஸ்தபிக்க வேண்டும்

ஒரு வாழை இலை போட்டு அதன் மேல் கால் படி பச்சரிசியினை பரப்பவும்  அதன் மேல் சொம்பினை வைக்கவும் அதில் முக்கால் அளவு தண்ணீரை நிரப்பவும், பின்னர் மஞ்சள் குங்குமம் வைத்து ஒரு மட்டை தேங்காயினை சொம்பின் மேல் வைக்கவும், மாவிலைகளை தேங்காயினை  சுற்றியும் அழகாக அமைக்கவும்.

இப்போது நம்ம வீட்டுக்கு மஹாலஷ்மியும் குபேரனும் வந்தாச்சு

அடுத்து அவர்களுக்கு முன் அழகான 5 முக விளக்கினை ஏற்றிவைக்கவும்,  மண் அகல் விளக்குகள் 2னையும் உடன் ஏற்றி மேற்கு நோக்கி அமைக்கவும்.

தீபஓளியின் வாயிலில் அன்னை மஹாலஷ்மி ஓளிவடிவில் வந்தாச்சு

2 செட் வெற்றிலை பாக்குகள் எடுத்து குபேரனுக்கும் மஹாலஷ்மிக்கும் வைக்கவும்

அடுத்து 2 தலை வாழை இலைகளை எடுத்து முன்னே வைக்கவும் அதில் பிரசாதம் எடுத்து வைக்கவும்

கண்டிப்பாக இருக்க வேண்டிய பிரசாதங்கள் குபேரனுக்கு

1. சக்கரை
2. பாதாம் பருப்பு
3. பிஸ்தா பருப்பு
4. முந்திரி பருப்பு
5. அக்ரூட்
6. பனங் கற்கண்டு
7. ஜாங்கீரி ( அவருக்கு மிகவும் விருப்பம்)
8.  மாதுளம்பழம் ரொம்ப முக்கியம்
9. வாழைப்பூ ரொம்ப ரொம்ப முக்கியம்
10. ஓரு டம்பளர் சுத்தமான பால் ( பனங்கற்கண்டு, பாதாம் சேர்த்து)
11. ரவா கேசரி 

இவைகளை அழகாக இலையினில் வைக்கவும்
அவசியம் வாழைப்பூ வைக்க வேண்டும் 

 
அன்னை மஹாலஷ்மிக்கு சில கனிவகைகள் வைக்கவும். வாழை, ஆப்பிள், திராட்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற பழங்களை அவளுக்கு படைக்கவும்

அடுத்து நாம் பூஜை ஆரம்பிக்க போகிறோம்

விநாயகர் பாடல் 

வாக்குண்டாம் நல்ல மணமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பால் சார்வார் தமக்கு

ஆபிராமி அந்தாதி 

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக்குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் வழித்துணையே

குபேரன் மந்திரம் 

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாமே நம: ஸ்வாஹா  

எனும் இம்மந்திரத்தினை 3000 முறை கண்டிப்பாக படிக்க வேண்டும்

உங்கள் இல்லத்தில் 3 பேர் இருந்தால் ஒன்றாக அமர்ந்து ஆளுக்கு ஆயிரம் முறை சொல்லாம். எண்ணிக்கைகளை கணக்கிட ரோஜா பூக்களை பயன்படுத்தி அன்னைக்கு சமர்பிக்கலாம்

மஹாலஷ்மி மந்திரம் 

ஓம் ஸ்ரீம் ஐம் செளம் லம் மஹாலஷ்மி ஸ்வாஹா - 108 தடவை சொல்லவும்


அடுத்து சாம்பிரணி மிகவும் முக்கியமாக போடவும்

முடிந்துபின்  தீபம் காட்டி பூஜையினை முடிக்கவும் 

பூஜை முடிந்தவுடனே கலைக்க வேண்டாம்
அடுத்த நாள் காலை முடிந்த அளவு வேறு பிரசாதம் வைத்து தூப தீபம் காட்டி பின்னர் கலைக்கவும்

மஹாலஷ்மியாக வழிபாடு நடத்தப்பட்ட செம்பிலிருக்கும் நீரினை வீடு அலுவலகம் எங்கும் தெளிக்கவும்.

நாணயங்களை எடுத்து ஒரு சின்ன மூட்டையாக கட்டி பெருமாள் கோவில் உண்டியலில் போட்டுவிடவும்.

மஹாலஷ்மி பூஜையினை சிறப்பாக செய்யவும்........

அன்னை அருள் நிச்சியம் உங்களுக்கு உண்டு..





Tuesday, 9 September 2014

3

மனித வாழ்வின் பெரும்பாலான பிரச்சனைகள், துயரங்கள், தோல்விகள் மற்றும் அவற்றால் ஏற்படும் மன அழுத்தம், மன இறுக்கம், மன உளச்சல்களுக்கான காரணங்கள் மூன்று என்கின்றன சாஸ்திரங்கள்.

 அவை 

ஆசை

கோபம்

பயம்


பகவத் கீதையின் 2வது ஆத்தியாயமான ஸாங்கிய யோகத்தில், இந்த மூன்றுக்குமான காரண காரியங்களையும், அவற்றிலிருந்து விடுபடும் மார்க்கங்களையும் குறிப்பிடுகிறார் பகவான் கிருஷ்ணர்

ஆசை



நமக்கு முதலில் பொருள்களின் மீது பற்று உண்டாகிறது. பற்று ஆசையாகிறது. 

 பேராசை


ஆசை அளவு கடக்கும்போது பேராசை ஆகிறது. அது நிறைவேறாத போது ஏமாற்றம் ஏற்படுகிறது.

கோபம்



அந்த ஏமாற்றமே கோபமாக மாறுகிறது 

கோபத்தால் மனகுழப்பம் ஏற்படுகிறது 

மனகுழப்பத்தால் நினைவு நாசமாகிறது. 

அதனால் புத்தி பேதலிக்கிறது 

அதுவே பயமாகவும் பீதியாகவும் மாறுகிறது

மூன்றையும் தவிர்க்க முடியாது ஆனால் முடிந்தவரை குறைக்கலாம் 


முயன்றால் எல்லம் முடியும்





Monday, 8 September 2014

பழனி தண்டாயுதபாணி


விநாயகர் தன் அன்னையிடமிருந்து தோன்றியவர். முருகனோ, தந்தையின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்தவர். இருந்தாலும், தாயின் மீது அவருக்கு கொள்ளைப்பாசம். பொதுவாக குழந்தைகள் தாய்க்குப் பிறகே தந்தையிடம் அடைக்கலமாவார்கள். இடும்பன் என்பவன் அகத்தியரின் உத்தரவுப்படி தென் பொதிகைக்கு கொண்டு செல்ல சக்திகிரி, சிவகிரி என்ற இருமலைகளை எடுத்து வந்தான். வழியில் இத்தலத்தில் பாரம் தாங்காத இடும்பன் மலைகளை கீழே வைத்து விட்டான். இதில் சக்திகிரி அம்பிகையின் அம்சம், சிவகிரி சிவனின் அம்சம். திருஆவினன்குடியில் இருந்த முருகன், அம்பிகையின் அம்சமான சக்திகிரி மீது ஏறி நின்று கொண்டார். இடும்பன் அவரை இறங்கும்படி சொல்லியும் கேட்கவில்லை. இடும்பன் அவரை எதிர்க்கத் துணிந்தான். அவனுக்கு தன் அருட்பார்வையை செலுத்தி, தன்னுடன் வைத்துக் கொண்டார் முருகன்.
மலையில் நின்ற இவர் கையில் தண்டம் வைத்திருந்ததால், "தண்டாயுதபாணி' என்று பெயர் பெற்றார். பிற்காலத்தில் இங்கு வந்த போகர் சித்தர், முருகனுக்கு நவபாஷாணத்தால் ஒரு சிலை வடித்தார். இந்த மூர்த்தியே மலைக்கோயிலில் மூலவரா காட்சி தருகிறார். காலப்போக்கில் இவரே பிரபலமாகிவிட்டார். தண்டம்' என்றால் "கோல்' அல்லது "அபராதம்' என்ற இருவகைப் பொருள்களைக் கொண்டது. "இவ்வுலக வாழ்வு நிலையற்றது' என்னும் ஞானபாடத்தை கற்பிக்கும் ஆசிரியராக முருகன் இத்தலத்தில் அருளுகிறார். ஆசிரியரின் கையில் கோல் இருக்கிறது. அதைக் கொண்டு பயமுறுத்தி, மாணவர்களை ஒழுக்க வழிக்கு திருப்புவார். முருகன் என்ற ஞான ஆசிரியனும், தன் கையிலுள்ள கோலால், உலக இன்பங்களான மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்னும் மாயைகளில் மூழ்கித் தவிக்கும் மக்களை ஆசைகளைத் துறந்து, தன்னைப் போல் ஆண்டிகோலத்திற்கு அழைக்கிறார். மறுப்பவர்களுக்கு "சோதனைகள்' என்னும் அபராதம் விதிக்கிறார். அச்சோதனைகளை தாங்க முடியாதவர்கள், அவரது வழிக்கே சென்று விடுகின்றனர்.
Bhogar Mahārshi
போகர்
சித்தர் போகர்
இவர் இத்தலத்து மூலவர் சிலையை செய்து பிரதிஷ்டை செய்தவர். சித்தர் போகர் அருள் விளையாடல்கள் நிகழ்ந்த இடம்தான் பழநி. இவர் தம் மாணாக்கர் புலிப்பாணியுடன் தம்மை நாடிவந்த மக்களுக்கு மருத்துவ உதவி செய்ததுடன் ஆன்மிக உணர்வையும் ஊட்டினார். பழநி மலை மீதுள்ள தண்டாயுதபாணி திருக்கோலம் போகரின் அருட்கொடையாகும். சித்தர் போகரின் சமாதி இக்கோயிலுக்குள்ளேயே உள்ளது.
முருகன் கையில் அருணகிரியார்!:மதுரையில் தாய் மீனாட்சி கிளி வைத்திருப்பதைப்போல, பழநி மலையில் முருகன் கையிலுள்ள தண்டத்திலும் ஒரு கிளி இருக்கிறது. முருகனின் அருள்பெற்ற அருணகிரியார் மீது பொறாமை கொண்ட சம்பந்தாண்டான் என்னும் புலவன் அவரை பழிவாங்க நினைத்தான். ஒருசமயம் அவன் வஞ்சனையால் பிரபுடதேவராயன் என்னும் மன்னன் மூலமாக, அருணகிரிநாதரை பாரிஜாத மலர் பறித்துவரும்படி கட்டளையிட செய்தான். அருணகிரியார், தன் உயிரை ஒரு கிளியின் உடலில் செலுத்தி, உடலை திருவண்ணாமலை கோபுரத்தில் கிடத்திவிட்டு தேவலோகம் சென்று பாரிஜாதம் கொண்டு வந்தார். இதனிடையே சம்பந்தாண்டான் அவரது உடலை தகனம் செய்துவிட்டான். கிளி வடிவில் திரும்பிய அருணகிரியார் தன் உடல் காணாமல் போனதால் திகைத்தார். முருகன் அவருக்கு அருள் செய்து தன் தண்டத்தில் அமர்த்திக் கொண்டார். இந்த அமைப்பில், தண்டத்தில் கிளி வடிவில் அருணகிரியாருடன் முருகன்காட்சி தருகிறார்.
தம்பியை காத்த அண்ணன்: சிறுவன் வடிவிலிருந்த முருகனிடம், இடும்பன் சண்டையிட முயன்றபோது, விநாயகர் அவரை காக்க வந்தார். ஆனாலும், முருகனுக்கு கிடைக்க வேண்டிய பழத்தை தான் பெற்றுக்கொண்டதால், தன் மீது அவருக்கு கோபம் இருக்கும் என்பதால், சுயவடிவத்தை மறைத்து நாக வடிவில், இடும்பனுடன் சண்டையிட்டார். இந்த விநாயகர் மலைக்கோயில் செல்லும் வழியில், இடும்பன் சன்னதி அருகில் சர்ப்பத்தின் மீது காட்சி தருகிறார். தன் வலது காலை நாகத்தின் தலை மீது வைத்துள்ளார். "சர்ப்பவிநாயகர்' என்று இவரை அழைக்கிறார்கள். மலைக்கோயில் அடிவாரத்தில் "பாதவிநாயகர்' இருக்கிறார். மலையேறும் முன்பாக இவரை வணங்கிச்செல்ல வேண்டும் என்பது ஐதீகம். இவ்விநாயகருக்கு பின்புறத்தில் முருகனின் பாதம் இருக்கிறது. இவ்விரு விநாயகர்களின் தரிசனமும் இங்கு விசேஷம்.
Tiru Avinankudi
திருஆவினன்குடி
Kulandai Velalyudhaswami Temple
மூன்றாம் படை வீடு
முருகன் முதலில் கோபித்து வந்து நின்ற தலம் என்பதால், மலை அடிவாரத்திலுள்ள திருஆவினன்குடி தலமே "மூன்றாம் படை வீடு' ஆகும். இங்கு முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். முருகன் குழந்தை வடிவமாக இருப்பதால் இவருடன் வள்ளி, தெய்வானை இல்லை. இவர் சிவனின் அம்சம் என்பதால் இவரது கருவறை சுற்றுச்சுவரில் (கோஷ்டம்) தெட்சிணாமூர்த்தி, பிரகாரத்தில் பைரவர், சண்டிகேஸ்வரரும் இருக்கின்றனர். பழநிக்கு செல்பவர்கள் முதலில் இங்கிருந்து 4 கி. மீ, தூரத்திலுள்ள பெரியாவுடையாரை தரிசித்துவிட்டு, பின்பு பெரியநாயகியையும், அடுத்து மலையடிவாரத்தில் இருக்கும் திருவாவினன்குடி குழந்தை வேலாயுதரையும் வணங்க வேண்டும். அதன்பின்பே மலைக்கோயிலில் தண்டாயுதபாணியை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.
திருஆவினன்குடி சிறப்பு
குழந்தை வேலாயுதரை, மகாலட்சுமி (திரு), கோமாதா (ஆ), இனன் (சூரியன்), கு (பூமாதேவி), அக்னி (டி) ஆகியோர் வழிபட்டதால் இத்தலம், "திருஆவினன்குடி' என்று பெயர் பெற்றது. இவர்களுக்கு இக்கோயில் பிரகாரத்தில் சிலை இருக்கிறது. அருணகிரியார் இவரை வணங்கி, திருப்புகழ் பாடவே முருகன் காட்சி தந்ததோடு, ஜபமாலையும் கொடுத்தார். இதனை அருணகிரியார் திருப்புகழில் குறிப்பிட்டு பாடியுள்ளார் .பழநிமலையின் வடபுறத்தில் பிரம்ம தீர்த்தம் இருக்கிறது. இந்த தீர்த்தக்கரையில் சிவன், அம்பிகையுடன் ரிஷப வாகனத்தின் மீதும், திருமால் கருடன் மீதும், பிரம்மா அன்னபட்சியின் மீதும் காட்சி தருகின்றனர். மூவரும் மேற்கு நோக்கியிருப்பது சிறப்பம்சம் .இத்தீர்த்த நீரை தெளித்துக் கொண்டுமும்மூர்த்திகளையும் வழிபட்டால் பாவம் நீங்கும் என்பது நம்பிக்கை .பழநிக்கு வரும் பெண்கள், மலைப்பாதையிலுள்ள வள்ளிசுனையிலுள்ள வில்வமரத்தில் திருமாங்கல்யக் கயிறு கட்டி வேண்டிக்கொள்கின்றனர். இங்கு முருகன், வள்ளி திருமண கோலத்தில் காட்சி தருகின்றனர். வில்வமரத்தின் அடியில் வள்ளி தனியாகவும் காட்சி தருகிறாள். சுனையில் உள்ள நாகருக்கு தீர்த்த அபிஷேகமும் செய்கின்றனர்.
முருகனுக்கு அன்னாபிஷேகம்
பழநியில் முருகப்பெருமானை மூன்று கோலங்களில் தரிசிக்கலாம். பெரியநாயகி கோயிலில் மயில் வாகனம் இல்லாமல் வள்ளி, தெய்வானையுடன் திருமணக்கோலத்திலும், திருஆவினன்குடியில் மயில் மீது அமர்ந்து குழந்தை வடிவிலும், மலைக்கோயிலில் கையில் தண்டத்துடனும் காட்சி தருகிறார். ஒரே தலத்தில் இவ்வாறு முருகனின் மூன்று கோலங்களையும் தரிசிப்பது அபூர்வம்.
சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியன்று, சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படும். ஆனால், பழநி தலத்தில் வித்தியாசமாக முருகனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் மலைக்கோயிலில் அருளும் தண்டாயுதபாணிக்கு உச்சிக்காலத்திலும், ஆனி மூல நட்சத்திரத்தில் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதருக்கு சாயரட்சை பூஜையின்போதும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இதற்கு அடுத்த இரண்டு நாட்களில் பூராடம் நட்சத்திரத்தில் பெரியநாயகி கோயிலிலும், உத்திராடம் நட்சத்திரத்தில் பெரியாவுடையார் கோயிலிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
முதல் வணக்கம் இடும்பனுக்கே!
தண்டாயுதபாணி கோயிலுக்கு செல்லும் வழியில் இடும்பனுக்கு சன்னதி இருக்கிறது. இடும்பன் தோளில் சக்திகிரி, சிவகிரி என்னும் இரண்டு மலைகளை சுமந்து வந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவரது சன்னதி எதிரில் நந்தி வாகனமும், இடும்பன், கடம்பன் பாதமும் இருக்கிறது.
இடும்பனுக்கு பூஜை செய்தபின்பே, முருகனுக்கு பூஜை நடக்கிறது. தினமும் அதிகாலை 3 மணிக்கு இவருக்கு அபிஷேகம் செய்து, 5 மணிக்கு பூஜை செய்வர். அதன்பின்பே மலைக்கோயிலில் முருகனுக்கு பூஜை நடக்கும். காவடி தூக்கிச்செல்லும் பக்தர்கள் இவரது சன்னதியில் பூஜை செய்து, பேட்டை துள்ளிய பின்பே செல்கின்றனர். இடும்பன் சன்னதியில் அவரது குரு அகத்தியர் உள்ளார். அருகில் இடும்பனும், கடம்பனும் நின்றிருக்கின்றனர். அகத்தியர் இங்கிருப்பதால், பக்தர்களுக்கு கமண்டலத்தில் நிரப்பப்பட்ட தீர்த்தம் தரப்படுகிறது. இதனை அகத்தியரே தருவதாக நம்பிக்கை. இதனை பருகிட நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை.

தைப்பூச விழா சிறப்பு:

தைப்பூச விழா
தைப்பூச விழா
தைப்பூசத்திருவிழா, பழநி தலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் தனித்து நடராஜராக நாட்டியமாடிய திருநாள் மார்கழி திருவாதிரை. அந்த நடனத்தை உமாதேவியான சிவகாமி அருகில் இருந்து ரசித்துக் கொண்டிருப்பாள். அதே போல ஆனந்த தாண்டவமாட உமாதேவிக்கும் ஆசை ஏற்பட்டது. அந்நடனத்தைக் காண திருமால், வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் ஆகியோர் வந்தனர். அம்பிகை நடனக்காட்சி அருளிய நாளே தைப்பூச நாளாகும். இவ்வகையில், தைப்பூசம் அம்பிகைக்குரிய நாளாகிறது. ஆனால், முருகத்தலமான பழநியில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இவ்வூரில் பெரியநாயகி அம்பிகை கைலாசநாதருடன் தனிக்கோயிலில் அருளுகிறாள். இங்கு சிவன், அம்பாள் சன்னதியின் நடுவில் முருகன் சன்னதி அமைந்துள்ளது. பிரதான வாசலும், கொடிமரமும் முருகன் சன்னதி எதிரிலேயே அமைந்துள்ளது. கோயிலுக்குள் நுழைபவர்கள் முதலில் முருகனையே வழிபட்டனர். காலப்போக்கில், முருகன் சன்னதி எதிரிலேயே தைப்பூச விழாவிற்காக கொடி ஏற்றப்பட்டது. தகப்பனை வழிபட வந்தவர்கள், தகப்பன் சுவாமியான முருகனை வழிபட்டனர். இத்தலமும் முருகனோடு தொடர்புடையதாக அமையவே, காலப்போக்கில் முருகனுக்கே தைப்பூச விழா கொண்டாடும் முறை அமைந்துவிட்டது.
தற்போதும் தைப்பூச திருவிழா, பெரியநாயகி அம்மன் கோயிலிலேயே நடக்கிறது. விழாவின்போது, இங்குள்ள உற்சவர் முத்துக்குமாரசுவாமி தினமும் எழுந்தருளுவார். இவ்விழாவின் ஏழாம் நாளன்று இக்கோயிலில் இருந்தே தேர் புறப்பட்டு, வீதியுலா செல்கிறது.

பங்குதாரராக முருகப்பெருமான்
மிகப்பெரிய ஏராளமான தொழிலதிபர்கள் தங்கள் வியாபாரத்தின் ஒரு பங்குதாரராக இத்தலத்து முருகனை வைத்துக் கொண்டுள்ளனர் .தங்கள் தொழிலில் கிடைக்கும் லாபத்தில் முருகனுக்கு தந்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் .தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் 3வது படை வீடு என அழைக்கப் பெறும் முக்கிய தலம்.
அவ்வையார் இத்தலத்து மூலவரை தனது பாடல்களில் சித்தன் என்று அழைக்கிறார். தொன்மையான சேரமன்னனும், பாண்டிய மன்னனும் ஒருங்கே போற்றிய திருத்தலம். அன்போடு நினைப்பவர்க்கு ஆராத முக்தி தரும் தலம். தமிழ் இலக்கியங்களில் சித்தன் வாழ்வு என சிறப்பு பெயர் பெற்றது. பழநி பஞ்சாமிர்தம் உலகப் புகழ் பெற்றது. மிக்க அழகுடைய தங்கத் தேர், தங்க மயில் வாகனம் ஆகியவை உள்ள தலம்.
தமிழகத்தில் உள்ள கோயில்களிலேயே தினந்தோறும் தங்க தேர் இழுத்தலும் அதன் மூலம் ஏராளமான வருமானமும் வரும் கோயில் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தலம் ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த இடம். தமிழ்நாட்டில் உள்ள கோயில்களிலேயே அரசுக்கு மிக அதிகமான வருமானத்தை அள்ளித் தரும் முதல் கோயில் இதுதான். பழநி மலை அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்கு செல்ல வின்ச் வசதியும், ரோப் கார் வசதியும் உள்ளது. 1,300 ஆண்டுகளுக்கு முன்பு சேரமான் பெருமான் என்னும் மன்னனால் இக்கோயில் கட்டப்பட்டது .திருமலை நாயக்கர் காலத்தில் திருப்பணிகள் நடந்துள்ளன .புராண காலத்தலும்,சங்க காலத்திலும் ஏராளமாகப் பாடப்பெற்ற சிறப்பு வாய்ந்த திருத்தலம்.

Sunday, 7 September 2014

அமர காவியம்- விமர்சனம்

dfg 
இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்பு நடக்கும் ஓர் உண்மை கலந்த காதல் கதையின் சம்பவத்தை அமர காவியம் திரைப்படத்தில் வருணித்திருக்கிறார் ஜீவாசங்கர்.

ஊட்டி கார்மெண்டில் படிக்கும் நாயகன் சத்யாவின் நண்பன் அதே கார்மெண்டில் படிக்கும் நாயகி மியாவை காதலித்துவருகிறார், மியாவும் இவர்களை கடந்து செல்லும்போது சத்யாவின் நண்பன் தன்னை தான் பார்த்து சிரித்துவிட்டு செல்கிறால் தன்னைத்தான் காதலிக்கிறார் என்ற தவறான எண்ணமும் கொள்கிறார்.
காதலை மியாவிடம் வெளிப்படுத்த தயங்கி சத்யாவை வைத்து தன் காதலை சொல்ல அனுப்புகிறார், சத்யா தன் நண்பனின் காதலை மியாவிடம் தெரிவிக்கும் போது நான் உண்ணை தான் காதலிக்கிறேன் என்று ஊட்டியின் வெண்பனியில் பூக்கின்ற மலரைப்போல் அழகான முறையில் வெளிப்படுத்தியுள்ளார் மியா.அந்த அழகான வெண்பனியிலிருந்து இவர்களுடைய காதல் கதையும் ஆரம்பமாகிறது. ஒரு காலகட்டத்தில் இவர்களுடைய விஷயம் தாறுமாரான முறையில் வீட்டிற்க்கு தெரியவருகிறது. இதனால் காதலியின் வீட்டார்கள் செய்யும் ஒவ்வொரு காரியங்களும் சத்யாவை மனஅழுத்ததிற்கு தள்ளப்படுகிறார். தன் காதலி மேல் வைத்திருக்கும் அளவுகடந்த அன்பினால் செய்யும் ஒவ்வொரு காரியமும் பைத்தியகாரன் என்ற எண்ணம் அனைவரின் மனதில் தோன்றவைத்துள்ளது. இதுமட்டுமல்ல காதலியோ தன் காதலன் பைத்தியகாரன் என்று நம்பும் அளவுக்கு நண்பன் செய்யும் துரோகங்கள் ஏராலம். எதார்த்த வகையில் இவனுடைய நாடகம் அம்பலமாயின. இறுதியில் காதல் ஊட்டியின் சிகரம் போல் உயர்ந்து நின்றதா ?? இல்லை ஆழ்ந்த பல்லத்தில் சரிந்ததா ?? என்பதே மீதி கதை……….

படத்தின் பின்னனி இசையமைப்பாளர் ஜிப்ரனின் இசை பாராட்டத்தக்கது. ஆகமொத்தம் அமர காவியம் படத்தின் படைப்பிற்கு ஜீவா சங்கருக்கு வாழ்த்துக்கள்….

சோதனையும் வேதனையும்

சோதனையும் வேதனையும்


வீழ்ந்தவன் வீழ்ந்து கொண்டேயிருந்து வாழ்ந்தவன் வாழ்ந்து கொண்டே இருந்தால், இறைவனின் இயக்கம் சரிவரி இயங்கவில்லை என்று பொருள்

ஆனால் வீழ்ந்தவனுக்கு எழுச்சியும் எழுந்தவனுக்கு வீழ்ச்சியும் மாறி மாறி நாம் காண்கிறோம்

இந்த எழுச்சியும் வீழ்ச்சியும் தான் இறைவன் இயங்கிக்கொண்டிருக்கிறான் என்பதனை குறிக்கின்றது.

மனிதனை பிரக்ஞையோடு வைத்திருப்பதற்குத்தான் இறைவன் ஒவ்வொருவருடையை விதியையும் மாற்றி மாற்றி அமைக்கின்றான்

ஆகவே சிக்கல் நேரும்போதெல்லாம் “கண்ணா” என்றோ, “கந்தா” என்றோ ஒரு முறை அழைத்து, அதை தாங்கிக் கொண்டு அமைதியடைய வேண்டும்


துன்பம் வரும்போது சிரி ; அதற்கு அடுத்தாற் போல வருவது துன்பமாக இருக்காது என்று வள்ளுவன் அறுதியிட்டு கூறினான்

கோடைக்கால வெயிலால் காய்ந்து போன ஏரிகள் மாரிக்கால மழையால் மறுபடியும் நிரம்பவில்லையா?

காலம் ஒரு நாள் மாறும்  - நம்
கவலைகள் யாவும் தீரும்

என வாழ்க்கையிலே கூடப் பல நேரங்களில் துன்பம் தாங்காமல் தற்கொலையினை பற்றி கூட நம்மில் பலர் சிந்திப்பதுண்டு

அது நடக்காமற் போனதற்கு காரணம் அவர்களாலும் இந்த பூவிலகிற்கு ஏதோ ஒன்று நடக்கவிற்பது என்பதனால் தான்

குழம்பும் புலம்பும் தவிக்கும் தத்தளிக்கும் மனமானது நன்மை கிடைத்தவுடன் “வாழ்ந்து பார்க்கலாம்” என்ற சபலம் கொள்ளும்
அந்த சபலம் அதிகமாகும் போது வாழ்க்கையை பற்றிய நம்பிக்கையும் வந்து விடும்
அந்த நம்பிக்கையோடு சோதனைகளை தாங்கிக்கொள்ள பழகு நண்பா

இறைவன் நிச்சியம் உன்னை கைவிட மாட்டான்


இது சத்தியம்..

பொன் முட்டையிடும் வியாபாரம்

பங்குவர்த்தகமோ பொருட் வர்த்தகமோ நல்ல பொன் முட்டை இடும் வாத்துகள்

அவற்றை நாம் சரியாக மேய்த்து கட்டி காப்பாற்றினால் தினமும் பல முட்டைகளை இட்டு  நம்மை வளப்படுத்தும்

அதனை அப்படி செய்யாமல் வயிற்றை கிழித்து எடுத்துக்கொள்ள எண்ணினால் ஓன்றுமே இருக்காது

நல்ல வழியில் சம்பாதிக்க நிறைய வாய்ப்புகள் உள்ள துறை இது
படித்து அறிந்துக்கொண்டு, தக்க முறையில் செய்தால் வளம் கொழிக்கும்
புரிந்து கொள்ளாமல் தவறாக கையாண்டால் நிச்சியம் கைகளை சூட்டுவிடும்

தோல்விகளும் வரும் வராது என்பது இல்லை ஆனால் அவற்றை எப்படி குறைப்பதெனை நாம் அறிய வேண்டும்

படிப்போம் செயல்வடிவம் கொடுப்போம் வெற்றி பெறுவோம்

Saturday, 6 September 2014

வாழ்வில் செல்வ வளம் தரும் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்

வாழ்வில் செல்வ வளம் தரும் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்

பைரவ வழிபாடு நம் வாழ்வில் பெரிய பெரிய மாற்றங்களை கண்டிப்பாக ஏற்படுத்தும் என்பது கண் கண்ட உண்மை
அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் ஞாயிற்றுக்கிழமை பைரவ வழிபாடு

ஞாயிற்றுகிழமை ராகு காலம் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பைரவ வழிப்பாட்டுக்கு மிகவும் நல்லது
மிளகு வடை மாலை சாற்றுவது நலம் தரும்

இவருக்கு முந்திரி பருப்பு மாலை சூட்டியும், செவ்வரளி மாலை போட்டும் 9 வாரங்கள் தொடர்ந்து வழிப்பட்டு வர தீராத கடன்களு தீரும் செல்வ வளம் பெருகும் என்பதும் நம்பிக்கை 

அந்த நேரத்தில் நல்லெண்ணெய் தீபத்தில்  4 மிளகு போட்டு விளக்கேற்றினால்
நல்லதே நடக்கும்

ஜாதக கர்ம வினைகள் அகலும், காரியத்தடைகள் நீங்கும், நினைத்தது கைகூடும் எதிரி வசியமாவார், மறைமுக எதிரிகளும் பைரவரை பூஜிப்பதால் மறைந்து விடுவார்கள்

Friday, 5 September 2014

வெற்றிக்கான நான்கு தூண்கள் 

             PATIENCE POWER PLAN PERSEVERANCE


ஒரு கட்டிடத்திற்கு அல்லது மண்டபத்திற்கு, குறைந்தது எத்தனை தூண்கள் தேவை?
நான்கு.

வெற்றியெனும் மாளிகைக்கும் குறைந்தது நான்கு தூண்கள் தேவை.


என்னென்ன?


முதல் தேவை: பொறுமை PATIENCE

கஷ்டங்கள், பிரச்னைகள், குறை பாடுகள், அசௌகரியங்கள் இவைகளை சகித்துக் கொண்டு தாக்குப்பிடிக்கும் பொறுமை. Patience.

இரண்டாம் தேவை : சக்தி POWER

பொறுமையோடு இருக்கிறேன் என்று கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கலாமா? கூடாதுதானே.

பொறுமை காக்கும் அதே நேரத்தில், நமது பலங்களையும் ஆற்றல்களையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்க வேண்டும்.

என்னென்ன பலங்கள்?

அறிவு பலம், மனோ பலம், ஆள் பலம், பண பலம் எல்லாம் தான்.

ஆம். இரண்டாவது தேவை, சக்தி( Power.)

மூன்றாம் தேவை : திட்டம் PLAN

வாழ்க்கையில் நமது லட்சியங்களை அடைவதற்கான, சரியான, தெளிவான, முழுமையான, நுட்பமான திட்டம். plan

நான்காம் தேவை : விடாமுயற்சி PRESERVENCE

திட்டம் தயாராகிவிட்டால், சந்தேகமேயில்லாமல் அடுத்த தேவை முயற்சி, முயற்சி, முயற்சி, குறிப்பாக, தடங்கலுக்குத் தளராத

விடாமுயற்சி  வெற்றியைத் தொடும்வரை

இந்த நான்கையும் தான், வெற்றி மாளிகையில் நான்கு தூண்கள் (Pillars) என்று குறிப்பிடுகிறேன்
.
ஆக 4Ps என்று சொல்லப்படும்,

PATIENCE
POWER
PLAN
PERSEVERANCE

என்ற நான்கு தூண்களும் உறுதியாக இருந்தால், வெற்றியின் விளைவாகிய செழுமை (Prosperity) எனும் மேற்கூரை, தானே வந்து

Thursday, 4 September 2014

 வாழ்வில் லட்சியம் வேண்டும்

 

வாழ்வில் அனைவருக்கும் ஒரு லட்சியம் வேண்டும்
அந்த லட்சியம் இன்றைக்கு அடைவதாக இருக்கட்டும் நாளைக்கு அடைவாதாக இருக்கட்டும் ஒரு மாதம், ஒரு வருடம், 20 வருடம் கழித்து நாம் அடையப்போவதாக இருக்கட்டும் ஆனால் எல்லோருக்கும் வாழ்வில் லட்சியம் வேண்டும்
தனது லட்சியத்தை அடைவதில் ஒருவன் பலமுறை தோற்கலாம் திரும்ப திரும்ப தோற்க நேரிடலாம். பலகீனத்திலிருந்து அவன் விடுபடும் வரை இத்தகைய தோல்விகள் அவன் வாழ்வில் நிச்சியமாக நிகழும் ஆனால் அவன் தனக்குள்ளே வளர்த்து கொண்ட மன உறுதி அவனது இயல்பான குணமாக மாறி வலிமை தருகிறதோ அது தான் வெற்றியின் உரைகல். வர இருக்கும் வெற்றிக்கும் சக்திக்கும் இதுதான் துவக்கம்
சந்தேகத்தையும் பயத்தையும் வென்றவன் தோல்வியை வென்றவன். அவனது ஒவ்வொரு எண்ணமும் ஒரு பெருஞ் சக்தியுடன் இணைந்து செயல்படுகிறது. அவன் எல்லா சங்கடங்களையும் வீரத்துடன் சந்திக்கிறான்; புத்திசாலித்தனத்துடன் சங்கடங்களிலிருந்து மீள்கிறான்
ஒரு துணிவான எண்ணம் ஒரு நோக்கத்துடன் இணைக்கப்படும் போது ஆக்க சக்தியாக மாறுகிறது. இதை உணர்ந்து கொள்ளும் மனிதன் உயர்ந்தவனாக, வலிமை படைத்தவனாக தன்னை உருவாக்கி கொள்கிறான். சஞ்சலமான எண்ணங்களிலிருந்தும், மாறி மாறி வரும் உணர்வின் மோதல்களிலிருந்தும் தன்னை தடுத்து கொள்கிறான். தனது மனோ சக்திகளைப் புரிந்து கொண்டு அவற்றை ஆட்டுவிக்கும் சூத்தரதாரியாக மாறுகிறான். புத்திசாலியாக விஷயம் தெரிந்த மனிதனாக மாறுகிறான்.
லட்சியம் இருந்தால் அன்றே வாழ்வில் முன்னேற்றமென்பது ஏற்படாது

Wednesday, 3 September 2014

மனதைப் பழக்கினால் மகத்தான வெற்றி!!





தலைப்பைப் படித்தவுடன் யாருக்காவது தோன்றலாம்:

'ஆமாம்..அவனவன் அலைஞ்சு திரிஞ்சு உழைச்சு முயற்சி பண்ணினாலே ஜெயிக்கறதுக்கு எவ்வளவு பாடு பட வேண்டியிருக்கு..இவரு மைனர் மாதிரி உக்காந்துட்டு மனசைப் பழக்குவாராம்..அப்படியே வெற்றியெல்லாம் வந்து குவியுமாம்..போய் பொளப்பப் பாருங்கய்யா..'

கண்டிப்பாக உழைப்புக்கு வெற்றியுண்டு தான்.

ஆனால் நாம் நமது மனதைப் பழக்கும் போது நமது எண்ண ஆற்றல் நம்மை உந்தி சரியான திசையில், சரியான முறையில் செயல்பட வைத்து வெற்றியை தேடித் தரும் என்பதே உண்மை.

சரி, நமது குறிக்கோளை அடைய மனதைப் பழக்க என்ன செய்ய வேண்டும்?

மிகவும் எளிது. இரண்டு விஷயங்களை செய்தால் போதும்.

1. நமக்கு எதை விரும்புகிறோமோ, எதை சாதிக்க நினைக்கிறோமோ அதை மட்டும் நினைக்க வேண்டும்.
2. எது வேண்டாமோ அதை நினைக்க கூடாது.

நமது இப்போது உள்ள நிலையை பொருட்படுத்தாமல் நமது குறிக்கோளுக்கு ஒத்த எண்ணங்களை நினைக்க வேண்டும்.

இதன் மூலம் நமது மனம் நமது செயல் திறனை கூட்டி, நம்மை குறிக்கோளை நோக்கி சரியான திசையில் இட்டு செல்லும்.

நாம் வெற்றி பெற நமக்கு சரியான சிந்தனைகளை அவ்வப்போது சொல்லும்.

மேலும் சரியான சூழ்நிலைகளையும், மனிதர்களையும் கொண்டு வந்து சேர்க்கும்.

நாம் என்ன எண்ணுகிறோமோ அதைத் தான் பெறுவோம்.

ஆகவே மனதைப் பழக்கினால் மகத்தான வெற்றி நிச்சயம்!

எண்ணங்களே வாழ்வு

உன் மனதில் எழும் எண்ணங்கள் தான் வெளி உலகின் சூழ்நிலைகளாக அமைகின்றன

புறவாழ்வில் உனக்கு நேர்ந்திடும் கெட்ட சம்பவங்கள் நிகழாமல் இருக்க வேண்டுமானால் உனது உள் மனத்து எண்ணங்களை சீர் செய்தே ஆக வேண்டும் 



நெல்சன் மண்டேலா

 “நல்ல மூளையும் ஒரு நல்ல இதயமும் இணைவது சால சிறந்தது ”என்கிறார்

எண்ணங்களை மாற்றாமல் உன் வாழ்வில் வசந்தம் வராது 

இவ்வுலகில் வாழும் நாம் எல்லோரும் மகிழ்வுடனும் சந்தோஷமாகவும் வாழ விரும்புகிறோம். அப்படியென்றால் அதற்கேற்ற எண்ணங்களை நம் மனதில் விதைத்து, வளர்த்து கண்காணித்து  பலன் பெற கூடாது 


விஷயம் எளிதாக இருக்கும்போது நாம் ஏன் நம் குழந்தைகளுக்கு இதனை கற்றுத் தந்து அவர்களின் எண்ணங்களை மாற்றி உலகையே மாற்ற கூடாது 

அவர்களின் கல்வித்திட்டத்திலேயே இதற்கான வழியினை நாம் நிச்சியம் செய்ய வேண்டும் 
அப்படி செய்வதால் அவர்களின் வாழ்வில் முன்னேற்றம் வரும் 

தீய எண்ணங்கள் கொண்டவர்களிடமிருந்து நீங்கள் விலகி இருந்தாலே போதும் எல்லாம் நன்மையாக நடக்கும் 


நல்ல நல்ல எண்ணங்களை விதைத்து நல்லவற்றை அறுவடை செய்வோம்...

 

வெற்றி விநாயகர்

கணபதி மூலமந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம் 

கணபதியே வரவரத ஸ்ர்வ ஜனம் மே 

வஸமாயை ஸ்வாஹா 


தினமும் இந்த மூலமந்திரத்தை 10 முறை சொல்லி நம் தினசரி வேலைகளை தொடங்கினால் எல்லாமே வெற்றி


கணபதியை வணங்குவோம் 

கலங்காமல் வாழ்வோம்........