வாழ்வில் லட்சியம் வேண்டும்
வாழ்வில் அனைவருக்கும் ஒரு லட்சியம் வேண்டும்
அந்த
லட்சியம் இன்றைக்கு அடைவதாக இருக்கட்டும் நாளைக்கு அடைவாதாக இருக்கட்டும்
ஒரு மாதம், ஒரு வருடம், 20 வருடம் கழித்து நாம் அடையப்போவதாக இருக்கட்டும்
ஆனால் எல்லோருக்கும் வாழ்வில் லட்சியம் வேண்டும்
தனது லட்சியத்தை
அடைவதில் ஒருவன் பலமுறை தோற்கலாம் திரும்ப திரும்ப தோற்க நேரிடலாம்.
பலகீனத்திலிருந்து அவன் விடுபடும் வரை இத்தகைய தோல்விகள் அவன் வாழ்வில்
நிச்சியமாக நிகழும் ஆனால் அவன் தனக்குள்ளே வளர்த்து கொண்ட மன உறுதி அவனது
இயல்பான குணமாக மாறி வலிமை தருகிறதோ அது தான் வெற்றியின் உரைகல். வர
இருக்கும் வெற்றிக்கும் சக்திக்கும் இதுதான் துவக்கம்
சந்தேகத்தையும்
பயத்தையும் வென்றவன் தோல்வியை வென்றவன். அவனது ஒவ்வொரு எண்ணமும் ஒரு
பெருஞ் சக்தியுடன் இணைந்து செயல்படுகிறது. அவன் எல்லா சங்கடங்களையும்
வீரத்துடன் சந்திக்கிறான்; புத்திசாலித்தனத்துடன் சங்கடங்களிலிருந்து
மீள்கிறான்
ஒரு துணிவான எண்ணம் ஒரு நோக்கத்துடன்
இணைக்கப்படும் போது ஆக்க சக்தியாக மாறுகிறது. இதை உணர்ந்து கொள்ளும் மனிதன்
உயர்ந்தவனாக, வலிமை படைத்தவனாக தன்னை உருவாக்கி கொள்கிறான். சஞ்சலமான
எண்ணங்களிலிருந்தும், மாறி மாறி வரும் உணர்வின் மோதல்களிலிருந்தும் தன்னை
தடுத்து கொள்கிறான். தனது மனோ சக்திகளைப் புரிந்து கொண்டு அவற்றை
ஆட்டுவிக்கும் சூத்தரதாரியாக மாறுகிறான். புத்திசாலியாக விஷயம் தெரிந்த
மனிதனாக மாறுகிறான்.
லட்சியம் இருந்தால் அன்றே வாழ்வில் முன்னேற்றமென்பது ஏற்படாது
0 comments:
Post a Comment